தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டின் போது 620 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள் பார்களை திறக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் திறக்கப்பபட்டுள்ளன. மேலும் பாரில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கை கழுவும் வசதியும், சானிடைசர்களும் இருக்க வேண்டும் என கூறியுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடைப்பிடித்து இன்று பார்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ரூ.620 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டின் போது ரூ.315 கோடி மது விற்பனையானது. இந்த முறை புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருவதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என்று தொடர் விடுமுறையில் ரூ.ஆர் 120 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.