சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கடும் கொரோனவைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் சீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து சீனத் தலைநகரான பெய்ஜிங்கில் மீண்டும் கடும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்நகரத்தில் அவசரநிலையை சீன அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில் 8000 மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. குடியிருப்புகளும், நோய்தொற்றுகளும் காணப்படும் கிராமங்களும் மூடப்பட்டுள்ளன. இது மற்ற நாடுகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.