Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: நாளை முதல் மீண்டும் – அரசு அதிரடி உத்தரவு…!!

நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது.

ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி மதுக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பாரில்  50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பார்களில் சமூக இடைவெளியை கடைப் பிடித்தல் அவசியம். பொது இடங்களில் கை கழுவும் வசதியும், சானிடைசர்களும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |