பிரபல நடிகர் பிரபாஸின் சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்படத்தில் பாகுபலி மூலம் மக்களிடையே அதிக பிரபலம் ஆனவர் பிரபாஸ் . இவர் தற்பொழுது பாகுபலியை விட பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் சகோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் .அதில்,
சகோ படத்திற்கான அபிஷியல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர் கூறியவாறே சகோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .ரசிகர்கள் அந்த போஸ்டரை கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் .படம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு வருவதால் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.