நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படத்தின் டிரைலர் நாளை அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக்தான் மாறா. மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் மாறா படத்தின் டிரெய்லர் நாளை அமேசான் பிரைமில் ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது .