Categories
மாநில செய்திகள்

பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு…. தோசை சுட்டு கொடுத்த தளபதி…. வைரலாகும் வீடியோ…!!

நடிகர் விஜய் பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு தானே தோசை சுட்டு கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய் எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவார். கட்டுமஸ்தான உடம்பு இல்லாமல் சிம்பிளாக கட்சிதமாக காலேஜ் மாணவர்கள் மாதிரி உடம்பை பாதுகாத்து வருகிறார். தற்போது விஜய்க்கு பிடித்த உணவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜயிடம் எடுக்கப்பட்ட பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி.

அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை நடிகர் விஜய் பகிர்ந்துள்ளார் இதையடுத்து அந்த பேட்டியில் தனக்கு பிடித்த உணவு மட்டன் சுக்கா என்று கூறியுள்ளார். தன்னுடைய வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்து வருவதாகவும், விஜய் ஜிம்மிற்கு செல்வதை தவிர்த்து வருவதாகவும் கூறி பேட்டி கொடுத்துள்ளார். இதையடுத்து அவரே பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு தோசை சுட்டு கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/i/status/1341723229170233344

Categories

Tech |