Categories
உலக செய்திகள்

கையெழுத்திட தாமதம்…. 14 மில்லியன் மக்களின் அவதி…. இறுதியாக டிரம்ப் எடுத்த முடிவு…!!

டொனால்ட் ட்ரம்ப் நிவாரண மசோதாவில் பல மாதங்களுக்கு பிறகு கையெழுத்திட்டுள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நிவாரணத்திற்கான செலவு தொகுப்பு மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முதலில் இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார். ஏனெனில் மக்களுக்கு பெரிய தொகையை அளிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இவர் தாமதித்து வந்ததால் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தற்காலிக வேலையின்மைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை இழந்துள்ளனர். இந்த நிவாரணமானது 900 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. மேலும் பல மாதமாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தற்போதுதான் காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது.

மேலும் ட்ரம்ப் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவிற்குள் இதில் கையெழுத்திடாமல் விட்டிருந்தால் பகுதி அரசாங்கம் பணி நிறுத்தத்தை துவங்கியிருக்கும். இதனால் அமெரிக்க மக்கள் 14 மில்லியன் பேர் வேலையின்மைக்கான சலுகைகளை பெறாமல் அவதிப்பட்டிருப்பர். ஆனால் ப்ளோரிடாவில் உள்ள டிரம்ப் கடைசியாக இந்த மசோதாவில் அவசரமாக கையெழுத்திட காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் அவர் காங்கிரசால் அதிகமாகி வரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். மேலும் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப், வரும் ஜனவரி 20ம் தேதி அன்று பதவி விலக இருக்கிறார். எனினும் அவர் தன் தோல்வியை இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை   என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |