Categories
தேசிய செய்திகள்

150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் முப்படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க டெல்லி வந்த ராணுவ வீரர்களின் 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. அதனால் குடியரசு தின விழாவில் முப்படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |