கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு செல்ல முடியாத ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பத்துக்கானி சாஸ்தா கோவிலில் இருமுடி கட்டி சென்று வழிபாடு வழிபட்டு வருகின்றனர்.
சபரிமலை மண்டல பூஜை , மகரவிளக்கு விழாவிற்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐய்யப்ப பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் காளி மலை உச்சியில் உள்ள வன சாஸ்தா கோவிலுக்கு இருமுடி கட்டி செல்ல துவங்கியுள்ளனர்.
கேரள தமிழக எல்லையில் பத்துக்கானி அருகே கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 600 அடி உயரம் கொண்ட காளி மலையின் உச்சியில் காணப்படும் வன சாஸ்தா கோவிலை பல நூறு ஆண்டுகளாக மலைவாழ் பழங்குடி மக்கள் வணங்கிவந்த இக்கோயிலில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் இருந்தும் ஐய்யப்ப பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர்.