Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ்…. செல்லுபடி முடிந்து விட்டதா? காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு…!!

டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியை மத்திய போக்குவரத்து அமைச்சகம் 2021 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது.

இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டியதன் காரணமாக, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி, பெர்மிட் போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2021 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பல்வேறு அறிவிப்புகள் மூலம், எப்சி, லைசென்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன் அல்லது வேறு ஏதேனும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் செல்லுபடியாகும் தன்மை டிசம்பர் 31, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த காலக்கெடுவை மீண்டும் மார்ச் 31, 2021 வரை நீட்டித்துள்ளது.

Categories

Tech |