சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா நடிகை நயன்தாரா குறித்து பேசியது அவரது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது .
தமிழ் திரையுலகில் தனது பாடல்களாலும் சிறந்த நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஆண்ட்ரியா . இவர் ,’ஆயிரத்தில் ஒருவன்’, ‘வடசென்னை’, ‘தரமணி’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார் . தற்போது இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதையடுத்து இயக்குனர் மிஸ்கினின் பிசாசு 2 படத்திலும் நடிக்கவுள்ளார் . இவரின் பிறந்த நாளன்று பிசாசு 2 மற்றும் மாஸ்டர் படக்குழுவினர் இருவரும் ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர் . இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா குறித்து பேசியுள்ளார் . அதில் ‘திரையுலகில் கதாநாயகிகள் வளர முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது .
அப்போதுதான் இந்த நடிகை இந்த முன்னணி நடிகரின் படத்தில் நடித்துள்ளவர் என்ற அடையாளம் காணமுடிகிறது . இதில் நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு விஜய் ,அஜித், ரஜினி போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டும் தான் தேவைப்பட்டது . மேலும் ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டும் தான் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கிறேன்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார் . இதில் நயன்தாரா குறித்து பேசியது அவரது ரசிகர்களை கோபப் படுத்தியுள்ளது .