ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எந்த கட்டாயம் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்வு வாரியத்தால் வருடம்தோறும் பல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்வு எழுதும் சிலர் அரசாங்க பணிக்கு செல்கின்றனர். இதன் மூலம் வருடந்தோறும் ஏராளமான மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டுதான் செல்ல வேண்டும். ஹால்டிக்கெட் இருந்தால் மட்டுமே தேர்வு அறைக்குள் சென்று தேர்வு எழுத முடியும்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயம் என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. எனவே தேர்வர்கள் இந்த கோரிக்கையை ஏற்று ஆதார் எண்ணை இணைக்கும் முடிவை டிஎன்பிசி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.