Categories
உலக செய்திகள்

இந்த அறிகுறிகள் இருக்கா…. உடனே மருத்துவமனை போங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

புதிய கொரோனா வைரஸினால் வழக்கமான கொரோனா அறிகுறிகளுடன் மேலும் 7 அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் ஆனது 70 சதவீதத்திற்கு மேலான வேகத்துடன் பரவி வருகிறது. இதனால் தான் மிக குறுகிய காலத்தில் அதிகமானோரை பாதித்து வருகிறது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டனிற்கு செல்லும் விமானங்களை ஐரோப்பிய நாடுகள் சில தடை விதித்துள்ளது.

மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, தற்போது பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் வழக்கமாக ஏற்பட்டுள்ள வறட்டு இரும்ல், வாசனை திறன் இழப்பு, சுவைக்கும் திறன் இழப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மேலும் 7 அறிகுறிகள் உருவாகும் என்று எச்சரித்துள்ளது. அதாவது சோர்வு மிகுதி, பசியின்மை, தலைவலி,  வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம் மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இது போல் ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது மேலும் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Categories

Tech |