இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர், கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் கீழே சென்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 95 புள்ளி ஏழு எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில், குணமடைவோர் விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.