ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை, ஜம்மு காஷ்மீரில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் உள்ள ஒருசிலர் தன்னை எப்போதும் அவமதிப்பதாகவும், ஜனநாயகம் என்ற வார்த்தையையே கேள்விப்படாத அவர்கள், அது குறித்து தனக்கு பாடம் எடுப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடினார்.
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றும், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஓராண்டுக்குள் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றதாகவும் பிரதமர் திரு மோதி குறிப்பிட்டார்.