Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி மாணவியின் ஆசை… நிறைவேற்றிய கனிமொழி… குவியும் பாராட்டு…!!!

தி.மு.க. எம்.பி. கனிமொழி விருதுநகர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு பேசிய ஒரு சிறுமியின் வீட்டிற்கு செல்வதாக உறுதியளித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி அக்கூட்டத்தில் ராஜகீர்த்திகா  என்ற 7ம்  வகுப்பு மாணவிக்கு கனிமொழியை மிகவும் பிடிக்குமாம். அவரைப் பார்ப்பதற்கே அந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளார்.

கூட்டம் தொடங்கியதும் அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை சொல்லலாம் என்று கூறி “மைக்” வழங்கப்பட்டது. அப்போது ராஜகீர்த்திகாவும் கைகளைத் தூக்கி நானும் பேசுகிறேன் என்றார். அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. மைக் வாங்கி அதில் பேசிய ராஜ கீர்த்திகா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா. நீங்கள் எங்கள் வீட்டிற்கு வருவீங்களா? என்று வெள்ளந்தியாக கேட்டார்.

அதன்பின் கனிமொழி அச்சிறுமியை பக்கத்தில் அழைத்து கூட்டம் முடிந்ததும் கட்டாயமாக உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று உறுதியாகச் சொன்னார். அதன்பின் கிராம சபை கூட்டம் சிறிது நேரத்தில் முடிந்தது. கனிமொழி, ராஜகீத்திகாவை அழைத்து இப்போது வா உங்க வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார்.

அதைக் கேட்டதும் அச்சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ராஜகீர்த்திகா வீட்டிற்கு சென்ற கனிமொழி ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை பரிசாக அளித்தார். அதன்பின் அவர் அச்சிறுமியிடம் படிப்பு தான் முக்கியம், அதில் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்பு அவர்கள் கொடுத்த காப்பியை குடித்து சிறிது நேரம் உரையாடிய பின் அவர் விடைபெற்றுச் சென்றார்.

Categories

Tech |