மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் புகைப்படங்களை பேஸ் ஆப் மூலம் குழந்தையாக மாற்றி வெளியாகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் ,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாகவும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சித்ரா. இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இவர் மறைந்து 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இவரது மரணம் தொடர்பாக தினமும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன. சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ,கணவரின் குடும்பத்தினர் ,நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார் என பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சித்ராவின் வீடியோக்களையும், போட்டோக்களையும் அவரது ரசிகர்கள் ஷேர் செய்து தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர் . தற்போது சித்ராவின் புகைப்படங்களை ஃபேஸ் ஆப் மூலம் குழந்தையின் முகம் போல மாற்றப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சித்ரா குழந்தையாக செம க்யூட்டாக உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.