Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… தூக்கி வீசப்பட்ட 5 பேர்… இருவர் உயிரிழந்த சோகம்..!!

இரண்டு மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன். இவர்  ஓய்வு பெற்ற அலுவலராக உள்ளார். நந்திவர்மன் தற்பொழுது சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலையில் நந்திவர்மன் சேத்துப்பட்டுக்கு தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிர்மலா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜா, ரேணு,மஞ்சுளா. இவர்கள் மூவரும் மரம் வெட்டும் தொழிலாளர்களாக உள்ளனர்.

நேற்று காலையில் மரம் வெட்டுவதற்காக மூவரும் மஞ்சுளாவின் 2 வயதுகுழந்தையுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் உலகம்பட்டு  கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது  அண்ணாநகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது நந்திவர்மன் வந்த மோட்டார் சைக்கிளும் ராஜா உட்பட 4 பேர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர்  மோதிக்கொண்டதில் 2 மோட்டார் சைக்கிளிலும்  வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அவர்களில் நந்திவர்மனும்  ராஜாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரேணு, மஞ்சுளா மற்றும் மஞ்சுளாவின் 2 வயது குழந்தை ஆகிய 3 பேரும் படுகாயமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |