குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். இவருக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சென்ற ஆண்டின் வெளியான விசுவாசம், நேர்கொண்டபர்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை பெற்றன. மேலும் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் லீவிங்க் செய்யும் காட்சிகள் புகைப்படமாக இணையத்தில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் உலக மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தல அஜித்தின் ரசிகர்கள் அவர் தன்னுடைய குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.