டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சுயநினைவு திரும்ப அந்த சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி மயங்கி கிடந்த இடத்துக்கு பக்கத்தில் அவருக்காக வாங்கப்பட்ட தின்பண்டங்கள் அனைத்தும் குவியலாகக் கிடந்ததுள்ளது. அதில் இருந்த கடையின் பில்லை காவல்துறையினர் எடுத்து பார்த்துள்ளனர். அதில் பெங்களூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் மயக்க நிலையிலிருந்த சிறுமியும் இருந்தது கண்காணிப்பு கேமராவில் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த பெண் சிறுமியை தூக்கி வீசிய இடத்தில் இருந்து இரவு 11 மணிக்கு திருப்பூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பல பஸ்ஸை கைகாட்டி நிறுத்த முயற்சித்துள்ளார் ஆனால் பஸ் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து அங்கிருந்த கிராம மக்கள் சந்தேகத்தில் அப்பெண்ணை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அப்போது தான் அவர் தன் குழந்தையை குப்பையில் வீசியததையும், பெங்களுருவில் டாக்டராக இருப்பதையும் கூறினார். மேலும் அந்த பெண் எதற்காக குழந்தையை குப்பையில் வீசினார்? என திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.