Categories
தேசிய செய்திகள்

ஹலால் இறைச்சிக்கு தடை..? டெல்லி மாநகராட்சி தீர்மானம்..!!

ஹலால் இறைச்சி இந்து மதத்திற்கு எதிரானது என தெற்கு டெல்லி மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இஸ்லாமியர்கள் ஹலால் என்று முறையில் வெட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் ஹோட்டல்கள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் ஹலால் முறையில் செய்யப்பட்டதா என விளக்கம் அளிக்க டெல்லி அறிவுறுத்தியது. பிறகு பாஜக தலைமையில் டெல்லி இயங்கி வருவதால் உணவகங்களில் ஹலால் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என கட்டாயமாக குறிப்பிட வேண்டுமென்று மாநகராட்சியின் நிலை குழு கூறியிருந்தது .

இப்போது ஹலால் இறைச்சி குறித்த நிலைப்பாட்டில் பாஜக பெரும்பான்மையாக இருப்பதால், இது இந்து மதத்திலும், சீக்கிய மதத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ராஜ்நாத் பேசியபோது: “மக்கள் என்ன இறைச்சியை வாங்கி சாப்பிடுகின்றனர் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப வாங்குவதற்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார். மாநகராட்சியின் அதிகார வரம்பில் உள்ள 104 வார்டுகளில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகள் உள்ளது.

90 சதவீத உணவுகளில் ஹலால் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் என்ன இறைச்சி பயன்படுத்தப்படுகிறது என எங்கும் குறிப்பிடுவதில்லை. இந்து மதத்திலும், சீக்கிய மதத்திலும் இந்த இறைச்சிக்கு சாப்பிடுவது மதத்திற்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுகள் மற்றும் இறைச்சி கடைகளில் என்ன இறைச்சி பயன்படுத்துகிறீர்கள் என்பதை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Categories

Tech |