Categories
அரசியல் மாநில செய்திகள்

தெய்வம்னு நானும் சொல்லுறேன்…! எம்.ஜி.ஆர் பற்றி புகழந்த சீமான் …!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்ஜிஆரை பற்றி எதுமே தெரியாம பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்கள் ? என்ற கேள்விக்கு என்னை விட எம்ஜிஆரை பற்றி அதிகம் தெரிந்தது யார் ? சொல்லுங்க, யாரையாவது பேச சொல்லுங்க.

சீமானுக்கு ஒண்ணுமே தெரியவில்லை, எம்.ஜி.ஆர் ஈழத்தமிழர்களின் தெய்வம் என்று வைகோ கூறியது குறித்தான கேள்விக்கு, அப்படியா..! நானும் தானே சொல்கின்றேன். எங்கள் அண்ணனுக்கு உதவுவதில் அவர் சரியாக இருந்தார்.  மற்ற எந்த இடத்தில் சரியாக இருந்தார். யார் என்னுடன் வாதிடுகிறார்கள் ?

எங்கள் வைகோ அண்ணனுக்கு என்னைய திட்டனும், அவ்வளவுதான். பெரியவர் திட்டுறாரு, சின்னவரு கேட்டுட்டு போக வேண்டியதுதானே. தம்பி கேட்டு போறேன். எம்ஜிஆர் நல்லாசி கொடுத்தார் என்றால் ஏன் அண்ணன் வைகோ எம்ஜிஆர் கட்சியில் போய் சேரவில்லை. வைகோ அண்ணன் ஏன் தனியாக கட்சி ஆரம்பித்தார் ? திமுகவில் ஏன் இருந்தார் ?

Categories

Tech |