அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரகுராம் (20 வயது). ரகுராம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு நர்மதா எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ரகுராம் குடிப்பழக்கம் உடையவர். ஆகையால் கணவர் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ரகுராம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். அதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த ரகுராம், தன்னை யாராவது திட்டினால் நான் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்,என்று மிரட்டினார். யாரும் எதிர்பார்க்காத போது அவர் திடீரென கிணற்றுக்குள் குதித்து விட்டார்.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் கோத்தகிரி தீயணைப்புப் படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்த ரகுராமன் சடலத்தை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென கிணற்றுக்குள் குதித்து வாலிபன் நீரில் மூழ்கி உயிரிழந்த தான் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.