Categories
தேசிய செய்திகள்

“BSNL பிராட்பேண்டின் புதிய சலுகை”… மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட முடியுமா..?

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய சலுகைகளை அறிவிக்க உள்ளது. மேலும் பிராட்பேண்ட் தவிர ஆன்லைனில் இலவசமாக பல சலுகைகளை அறிவிக்க உள்ளது. இது மற்ற பங்குசந்தைகள் உடன் போட்டி போட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ஒரு புதிய விலை மாற்றத்தை துவங்கியுள்ளது. பிராட்பேண்ட் மற்றும் எப்டிடிஎச் இணைப்புகளை இலவசமாக, சில சலுகைகளையும் மற்றும் வேலைத்திட்டங்களையும் வழங்க உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் பிராட்பேண்ட் மற்றும் அல்லது எப்டிடிஎச் திட்டங்களை ரத்து செய்த கேரளாவை சேர்ந்த பயனர்கள், பிராட்மேன் இணைப்பை முற்றிலும் இலவசமாக நிறுவ திட்டங்களை வழங்க உள்ளது.

எனவே பிராட்பேண்ட் திட்டங்களுக்கான இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்வதன் மூலம் பிஎஸ்என்எல் ஒரு பெரிய தள்ளுபடி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. புதிய சலுகை தவிர ரூபாய் 199 போஸ்ட்பெய்டு சலுகை மாற்றம் செய்யப்பட்டு டேட்டா ரோல் ஓவர் பலன்கள் வழங்கலாம் எனவும், பிஎஸ்என்எல் சலுகை அறிமுகமானதும் ரூபாய் 99, ரூபாய் 225, ரூபாய் 325, ரூபாய் 699 மற்றும் ரூபாய் 1125 போன்ற சலுகைகள் நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் புதிய சலுகை நாடு முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட இருக்கிறது.

ரூபாய் 798 என்னும் சலுகையில் 50 ஜிபி முதல் 150 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வசதி, 100 எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரூபாய் 999 சலுகையில் 75 ஜிபி முதல் 525 ஜிபி டேட்டா வரை ரோல் ஓவர் வசதியில் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்று இணைப்புகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |