Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு விளக்கம்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வு குறித்து விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8 வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி விளக்கம் பெற தேர்வாளர்கள் 18004251002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்வாணையம் மின்னஞ்சல் முகவரிலும் ([email protected]) உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள விடைத்தாளின் மாதிரி படிவம், விடைத்தாள் கையாளும் முறை குறித்து tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இது டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |