Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…”3 வருடம், 600 பேர்”… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பொதுவாக தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் நடத்தை கொஞ்சம் வீரமாகவே இருக்கும். மதுரையில் வாழும் மக்கள் அனைவரும் துணிச்சலாக செயல்களில் ஈடுபடுவது உண்டு. இருப்பினும் இந்த செயலில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மதுரை அருகே கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் இன்றி தவித்த பத்து வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவர் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார்.

அவரை நம்பி சென்ற சிறுமியை ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு, சின்னதம்பி ஆகிய பெண்களின் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் அந்த சிறுமியை பாலியல் தொழிலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி நாள்தோறும் ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்துள்ளார்.

இதுகுறித்த தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமியை பத்திரமாக அழைத்து வந்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் ஏற்படுத்திய முகவர்கள் அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு ஆகிய 6 பேரை ஆள் கடத்தல் மற்றும் விபச்சார தடுப்புப் பிரிவு பிரிவின் அடிப்படையில் ஹேமமாலி தலைமையிலான காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் 5 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்களை சேகரித்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் சமீபத்தில் இதுபோன்ற கொடுமையான செயல்களும் நடைபெற துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |