Categories
லைப் ஸ்டைல்

9 மணிக்கு மேல் சாப்பிட்டால்… மிகப்பெரிய ஆபத்து… இனிமே இப்படி சாப்பிடாதீங்க…!!!

இரவு உணவை நேரம் தாழ்த்தி சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட பிறகு உடனே தூங்குவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் சாப்பிடுவதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நாம் சாப்பிடும் நேரத்தை முறை தவறி சாப்பிடுவதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான மனிதர்கள் காலை உணவை 11 மணிக்கு மேல் தான் சாப்பிடுகிறார்கள். மதிய உணவு மூன்று மணி, இரவு உணவு 9 மணிக்கு மேல் சாப்பிடுகிறார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் சில ஆபத்துகள் உள்ளன.

அதன்படி இரவு உணவை தாழ்த்தி 9 மணிக்கு மேல் சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு உடனே தூங்குவது ஆகிய பழக்கங்களால் மார்பகப் புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் கேன்சர் தெரிவித்துள்ளது. மேலும் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவு, எளிதில் செரிக்காத உணவு ஆகியவற்றால் இதய நோய்கள் வரவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Categories

Tech |