Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காலராவுக்கு ஒருவர் பலி…. 40 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

காலராவுக்கு தமிழகத்தில் ஒரு நபர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வசிப்பவர் கண்ணன்(60). இவருக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு காலரா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுகுடலில் பாதிப்பு உண்டாகும் பாக்டீரியாவான விப்ரியோ காலரே தொற்று காலரா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியா உணவு மற்றும் நீரில் பரவி இருப்பதால், இதனை மனிதர்கள் உண்ணுவதன் மூலம் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் காரணமாக நீர் இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |