கோவில் பூஜையில் கணவன் கலந்து கொள்ளாததால் மனைவி தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கீதா – ரகு. கேபிள் டிவி ஆபரேட்டராக ரகு வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் தீபக் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கீதா தன்னுடைய படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கீதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்த காவல்துறை விசாரணையில், திருமுல்லைவாயில் தாமரை ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இது கீதாவின் தலைமையில் தான் நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் தன் கணவர் பங்கேற்றகாததால் மனமுடைந்த கீதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.