கும்பம் ராசி அன்பர்களே…! தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.
ஏற்கனவே இருந்த பிரச்சினை அனைத்தும் சரியாகும். முன்னேற்றமான தருணங்கள் அமையும். தொகை நீங்கள் கேட்ட இடத்திலிருந்து நல்லபடியாக வரும். குடும்ப தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். மற்றவர்களின் வேலைக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் கல்வியை தவிர மற்றதில் கவனம் சிதற விடக்கூடாது. வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினை படிப்படியாக குறையும். மனநிம்மதி ஏற்படும். கணவன் மனைவியிடையே திருப்தியான உறவு காணப்படும். யோகம் அமையும். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். கடன்கள் எதுவும் வாங்க வேண்டாம்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் பிரச்சனை எதுவும் இருக்காது. திருமண நடக்கும் சூழல் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் நீல நிறம்.