துலாம் ராசி அன்பர்களே…! ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தைக் கொடுக்கும் நாளாக இருக்கும்.
நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். தொழில் போட்டிகளை எளிமையாக சமாளித்து விடுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பயணத்தால் எதிர்பார்த்த நல்ல பயன் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் வேகம் இருக்கும். விவேகத்துடன் வெற்றி வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் பல மடங்கு உயரும். நல்ல வருமானத்திற்கு அடித்தளமிட்டு கொள்வீர்கள். வருமானத்தை இரட்டிப்பாக்க கொள்வீர்கள். உத்யோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும். நல்ல வரன் வீடு தேடி வரும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். தாய் தந்தையரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். பிள்ளைகளை தயவுசெய்து சந்தேகப்பட வேண்டாம். எடுக்கும் முயற்சியில் தெளிவு இருக்கும். நல்ல நேரத்திற்கு உறங்க வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்திலே நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.