நடிகர் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31 வெளியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ரஜினி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பேன் என்ற ரஜினி, எம்ஜிஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்க ஆயத்தமாகி வருகிறார். ஏற்கனவே நான் தான் எம்ஜிஆர் வாரிசு என்று கமல் சூளுரைத்து வரும் நிலையில், தற்போது ரஜினியும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார். அதனால் தமிழகத்தில் தேர்தல் களம் மிக விறுவிறுப்பாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.