தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மையம் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மேலும் மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் அல்லாமல் செழுமை கோட்டிற்கு மேல் வைக்க வேண்டும் என்பதே நோக்கம். தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும். இணைய பாதுகாப்பில் மக்கள் நீதி மையம் உறுதியாக இருக்கிறது. வரும்முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.