Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்… விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்… மத்திய அரசு செவி சாய்க்குமா…!!!

டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் இன்று முதல் சங்கிலித் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.

மேலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். வட இந்தியாவில் குளிர் வதைப்பதை பொருட்படுத்தாமல் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் 26 ஆவது நாளான இன்று முதல் விவசாயிகள் சங்கிலித் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் குரலுக்கு இன்னும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |