நடிகை ஹன்சிகா தெருநாய்களுக்கு உணவளித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா . இவர் தற்போது தெரு நாய்களுக்கு உணவளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் . சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரு நாய்களுக்கு உணவளித்த வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை ஹன்சிகா, ‘கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் போது தெருக்களில் உள்ள நமது நண்பர்களையும் மறந்து விடக்கூடாது .
நாம் தெரு நாய்களின் பசியை உணவளித்து தீர்க்க வேண்டும் . தினமும் நம்மால் முடிந்த சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்’ என பதிவிட்டுள்ளார் .தெரு நாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகாவின் இந்த செயலுக்கு லைக்ஸ் குவிந்துள்ளது.