Categories
உலக செய்திகள்

இதான் முதல் கொரோனா தடுப்பூசி… போட்டுக்கொண்ட பிரதமர் ..!!

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது.  முதல் தடுப்பூசியை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செலுத்தி கொண்டார். 

இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது.  அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசிக்கு  அங்கிகாரம் அளித்த இஸ்ரேல் அரசு தற்போது தடுப்பூசி போடும் பணியை தொடங்கி  உள்ளது.  அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் தடுப்பூசி செலுத்தி  கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் தானே முதல் ஊசியை செலுத்தி கொண்டதாக தெரிவித்தார். முதற்கட்டமாக 40 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

Categories

Tech |