மகாராஷ்டிரா மாநிலம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்ட்டிரா மாநிலம் நலசோபரா ரெயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரெயில் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
இதுபற்றிப் போலீசார் ஒருவர் கூறும்பொழுது, முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து எனத் தெரிகிறது. இதுபற்றி நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விரார் பகுதியைச் சேர்ந்த நபர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது எனக் கூறியுள்ளார்.