தந்தை ஒருவர் தன் குழந்தையை ஒரு வருடம் கழித்து பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள kent நகரை சேர்ந்தவர் benjamin biendera (27) . இவரது மனைவியான kristina nobis (34). ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர்களது மகன் immanual biendera . இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டதால் kristina தனது மகனுடன் பெஞ்சமினை வார இறுதி நாட்களில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இநிலையில் கடந்த வருடம் kristina மகனுடன் பெஞ்சமின் வீட்டிற்கு வரவில்லை. இதனை தொடர்ந்து கிறிஸ்டினா தன் குழந்தையுடன் மாயமானார். மேலும் kristina ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பல இடங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் இவர்கள் மாயமாகி ஒரு வருடம் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் தற்போது justice peel என்ற நீதிபதி இந்த குழந்தையை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி ஊடகங்களில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தேடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜெர்மனியில் இருந்த குழந்தை இம்மானுவேல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குழந்தை பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டு தந்தை benjamin னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது குழந்தையை ஒரு வருடம் கழித்து பார்த்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளாதாக benjamin தெரிவித்துள்ளார்.