Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர் – பிரதமர் குற்றச்சாட்டு …!!

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புவதாகவும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மீண்டும் தெரிவித்தார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட மோடி, வேளாண் வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள், முற்போக்கான விவசாயிகள் கூறியதன் அடிப்படையிலேயே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |