படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்திருக்கிறார் . ‘அண்ணாத்த’ மற்றும் ‘சாணிக் காயிதம்’ இதையடுத்து 2 தெலுங்கு படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் தெலுங்கு படமான ‘ராங்தே’ படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் . கதாநாயகனாக நிதின் நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் வெங்கி இயக்குகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் .
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ஹலோ துபாயா? என்னோட பிரதர் மார்க் இருக்காரா? ஓ நீ தான் பேசுறியா ? ஹவ் ஆர் யூ? என காமெடியான வசனத்தை பதிவிட்டுள்ளார் . மேலும் அவர் அணிந்திருக்கும் டீசர்ட்டில் ஹலோ துபாயா ? அச்சிடப்பட்டுள்ளது. கீர்த்தியின் இந்த காமெடியான பதிவுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்ஸ்களையும், ஜாலியான கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர் .