5 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் பெறக்கூடிய செக்யூரிட்டி வேலைக்கு குறைந்த பட்ச ஆங்கில எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயம் பொய்த்துப் போய் வேறு வேலைக்கு செல்ல முடியாதவர்கள், செக்யூரிட்டியாக பல்வேறு நகரங்களில் பணிக்கு சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு செக்குரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் இவ்வேளையில் சேருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் 10,000 வரை வழங்கப்படுகிறது.
செக்யூரிட்டி பணிகளுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு நேற்று அமல்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச சம்பளம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. செக்யூரிட்டியாக பணிபுரிய 160 சென்டிமீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும், 80 சென்டி மீட்டர் மார்பகமும் இருக்க வேண்டும். நல்ல கண் பார்வையும், நிறங்களை அடையாளம் காணும் திறனும் இருக்க வேண்டும்.
செக்யூரிட்டி குறைந்தபட்ச ஆங்கில எழுத்துக்கள், எண்களை அடையாளம் காணும் திறன் இருக்க வேண்டும். முன்னாள் போலீசாருக்கு 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 16 மணி நேர களப்பயிற்சி அளிக்க வேண்டும். புதிதாக சேர்பவர்களுக்கு 100 மணி நேர வகுப்பு பயிற்சியும், 60 மணி நேர பயிற்சியும் அளிக்க வேண்டும். வெடிகுண்டுகளை அடையாளம் காணும் பயிற்சி, முதலுதவி, அவசர கால நிர்வாகம் அடையாளம் காணும் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.