மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலாவுதீன் தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் நாசர்(42). இவர் மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தான் இருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருடைய நாசரின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து, கைதியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.ர் கடந்த 2003-ஆம் வருடம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாசர் 16 வருடங்களாக சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.