Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: சமையல் எண்ணெய் விற்க தடை – பரபரப்பு உத்தரவு …!!

பேக்கிங் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணையை விற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணைகளை சில்லறை விற்பனையில் விற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு சட்டத்தின்படி சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் எவ்வாறு விற்கப்படுகிறது ? என்னை தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன ?கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னை தரம் குறித்து எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டன ? என  தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 18 ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Categories

Tech |