Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக டெல்லி பேரவையில் தீர்மானம் …!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 23வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி போக்குவரத்து அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கைலாஷ் கெலாட் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதையடுத்து இது தொடர்பான விவகாரத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர கோயல், விவசாயிகளுக்கு எதிரான இந்த கருப்பு சட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறிய சட்ட நகல்களைக் கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

Categories

Tech |