கடலை மாவு வெந்தய கீரை பரோட்டா செய்ய தேவையான பொருள்கள்:
கடலை மாவு – 2 கப்
கோதுமை மாவு – 1 கப்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தய கீரை – 2 தேக்கரண்டி
சீரக விதைகள் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவுடன் கடலை மாவுடன், தேவையான அளவு பெருங்காயம், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எண்ணெய் என எல்லா பொருள்களையும் போட்டு சாப்பத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
பின் பிசைந்த மாவினை உருண்டைகளாக பிடித்து, ரொட்டி போன்று தட்டைகைலாக தேய்த்து வைக்கவும்.
அதனை தொடர்ந்து, பரோட்டாவை சூடான தவாவில் போட்டு 2 பக்கங்களும் பொன்னிறம் ஆனதும் எடுக்கவும்.
இப்போது சூடான பரோட்டாவை, அதற்கு பொருத்தமான தேங்காய் சட்னியுடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.