மக்கள் பிரதமர் மோடி மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேட்டியளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருவதால் தேசிய அரசியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஆமைக்குமா ? பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா என்று உலக நாடுகள் முழுவதும் இந்திய தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள பாஜகவின் கட்சித் தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்த போது , கடந்த 2014_ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இப்போதும் மக்கள் வைத்துள்ளனர். கடந்த 2014_ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மோடி , மன்மோகன், சோனியா ஆகியோர் இடையே போட்டி நிலவியது. ஆனால் இப்போது இந்தியாவை பிரதமர் மோடி அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவித்துவிட்டோம். அதே போல் எதிர்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க முடியுமா? என்றும் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.