பெண்ணிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தடுப்பூசியை பற்றி பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மருத்துவமனையை சேர்ந்த ஊழியரான ஒரு பெண்ணுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்ட 10 நிமிடங்களில் அவருக்கு anaphylactic ரியாக்சன் எனப்படும் ஒவ்வாமை நோய் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வாமை பிரச்சினை உடைய நபர்களுக்கு மட்டும்தான் anaphylactic ரியாக்சன் எனப்படும் இந்த ஒவ்வாமை நோயை ஏற்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு இதற்கு முன்னர் இப்பிரச்சனை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமெரிக்காவில் தடுப்பூசியால் ஒவ்வாமை நோய் இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இதேபோல் பிரிட்டனிலுள்ள மேலும் 2 மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையும் இதுவாக இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. இதற்கிடையில் பிரிட்டனில் பாதிக்கப்பட்ட இருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாடே பதறிக்கொண்டிருக்க பாதிக்கப்பட்ட பெண்ணோ தன்னால் மீண்டும் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ள முடியாது என்று கவலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.