Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சமையல் செய்வதில் தகராறு”… வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நேர்ந்த சோகம்..!!

சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  37 வயதுடைய  சரவணன். இவருடைய உறவினர்  42 வயதுடைய தெய்வேந்திரன். இவர்கள் இருவரும் வியாபாரிகளாக உள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கிராமங்களுக்கு சென்று சோப்பு , தலையணை போன்ற பொருட்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வியாபாரத்திற்காக செம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர் . மேலும் தினமும்  அவர்களே சமையல் செய்து சாப்பிட்டும் வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணனுக்கும் தெய்வேந்திரனுக்கும் இடையே சமையலை யார் செய்வது என்பது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த  சரவணன் தெய்வேந்திரனை கத்தியால் குத்த முயன்றுள்ளார் . அதை சுதாரித்துக்கொண்ட தெய்வேந்திரன் கத்தியை பிடுங்கி சரவணனை குத்தியுள்ளார். இதில் சரவணன்  சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார் . இதையடுத்து  தேவேந்திரன் அறையிலிருந்து  தப்பி ஓடிவிட்டார்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்த சரவணனின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து சரவணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை குற்றவாளியான தேவேந்திரனையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |