தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்லும் மக்கள் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிக்குச் செல்லும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.