Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பிறந்து 35 நாட்கள்”… சாலையில் வீசப்பட்ட அவலம்… மீட்கப்பட்ட பொன்னியன் செல்வன்..!!

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர்சூட்டி காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மதுரை மேம்பாலம் அருகே தனியாக அழுது கொண்டிருந்தது. இந்தக் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீசார் அந்த குழந்தையை மீட்டு அங்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த குழந்தை அனாதையாக விட்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் மதுரை அண்ணாநகர் சட்ட ஒழுங்கு போலீஸ் கமிஷனர் லில்லி கிரேஸ் குழந்தைக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் சூட்டினார். அதன்பின் பொன்னியின் செல்வன் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த குழந்தை மாவட்ட தத்துவள மையத்தில் பாதுகாக்கப்பட உள்ளது. யாரேனும் குழந்தையை தவற விட்டிருந்தால் மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழுவை தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம்.

Categories

Tech |